Friday, January 13, 2006

வாழி திருநாமம்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும் புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு ஞூற்று நாற்பத்து முன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியு கந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!


இதுவரையில் திருப்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் இந்தச் சீரிய பணியில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவிய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

11 comments:

said...

அதற்குப் பரிசாக இன்றைய தினமலரில் தங்கள் வலைப்பூவைப் பற்றிய விமரிசனத்தப் பதிப்பித்திருக்கிறோம்.

said...

// அதற்குப் பரிசாக இன்றைய தினமலரில் தங்கள் வலைப்பூவைப் பற்றிய விமரிசனத்தப் பதிப்பித்திருக்கிறோம். //

ஐயா நன்றி ஐயா! நீங்களும் பொருத்தமான இடத்தில்தான் வாழ்த்துச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி ஐயா.

said...

//அதற்குப் பரிசாக இன்றைய தினமலரில் தங்கள் வலைப்பூவைப் பற்றிய விமரிசனத்தப் பதிப்பித்திருக்கிறோம்.
//

இல்லையா பின்ன? :-)

என்ன இராகவன். இந்தப் பாடல்களுக்குப் பொருள் சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்?

தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. நான் விரைவில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் துவங்கவேண்டும்.

அடுத்து என்ன? கந்தர் அனுபூதியா? காத்திருக்கிறோம் இனியவை கேட்க.

said...

// //அதற்குப் பரிசாக இன்றைய தினமலரில் தங்கள் வலைப்பூவைப் பற்றிய விமரிசனத்தப் பதிப்பித்திருக்கிறோம்.
//

இல்லையா பின்ன? :-) //

என்னது? இது உங்கள் ஏற்பாடா? உண்மையைச் சொல்லுங்கள்!

// என்ன இராகவன். இந்தப் பாடல்களுக்குப் பொருள் சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்? //

இதைப் பாடலாகவே படிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுதான் காரணம். வேறு காரணம் இல்லை.

said...

// அடுத்து என்ன? கந்தர் அனுபூதியா? காத்திருக்கிறோம் இனியவை கேட்க. //

ஆமாம். ஆனால் ஒரு வாரம் ஓய்வு. அதற்குப் பிறகு வாரம் ஒன்றாக இடப் போகிறேன். ஒவ்வொரு செவ்வாயும் என்று வைத்துக் கொள்ளலாமா?

said...

நம்ம ஏற்படெல்லாம் கிடையாது. நமக்கு தினமலர்ல யாரையும் தெரியாது. சும்மா பேச்சுக்குச் சொன்னேன்.

செவ்வாய் செவ்வாய் முருகா நீ வருவாய்ன்னு காத்திட்டிருக்கேன்.

said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!

said...

இராகவன்,
நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
தேசிகன்
http://www.desikan.com/blogcms/

said...

// இராகவன்,
நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
தேசிகன் //

நன்றி தேசிகன். உங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி.

said...

முதலில் இருப்பது இரண்டு வெண்பாக்கள். இப்படி பிரித்து நான்கு வரிகளில் எழுதவேண்டும்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு


**
**
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கன்னி உகந்தளித்தாள் வாழியே
**
**

பிழையென்று நினைத்ததைத் திருத்தியிருக்கிறேன். ரொம்ப காலத்துக்கு முன் மனப்பாடம் செய்தது. தவறாக இருக்கலாம்.

said...

சுந்தரமூர்த்தி சார்,

வெண்பா இரண்டையும் சரியாக எழுதிவிட்டீர்கள்.

வாழித்திருநாமத்தில் சொன்னது தான் எனக்குத் தவறாகப் படுகிறது. சரியாக எனக்குத் தோன்றுவதைக் கீழே கொடுக்கிறேன்.

ஒரு நூற்று நாற்பத்தியொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே