Tuesday, September 05, 2006

32. மூன்று சகோதரர்களின் கதை

ஒரு ஊரில் அண்ணன் தம்பிகள் மூவர் இருந்தனர். நல்ல குடும்பம். மூத்தவன் திருமணம் செய்து கொண்டான். வாய்த்தவள் நல்ல மனையாள். இல்லறம் நல்லறமாக இருந்தது. இறைவன் அருளால் மழலைச் செல்வங்கள் பெருகின. அண்ணன் வாழும் வாழ்வை நினைத்து அடுத்தவனும் திருமணம் செய்து கொண்டான். அந்தோ பரிதாபம்! அவனுக்கு பெண்ணெனும் உருவில் வாய்த்தவள் அன்பே துளிர்க்காத உலக்கைக் கட்டை போன்றவள். மனைவியை திருத்த வழி தெரியாமல் அவளோடு சண்டையிட்டு அவனும் அமைதியிழந்தான். நிம்மதி போனது. பிள்ளைகளும் ஆன பின் பிரச்சனைகள் பெரிதாயின. இளைய அண்ணன் படும் வேதனையைப் பார்த்து கடைசித் தம்பி இல்லறத்தையே வெறுத்து துறவறம் பூண்டான்.

இவர்கள் மூவரில் மூத்தவனும் கடைக்குட்டியும் நிம்மதியாக இருந்தார்கள். வாழ்க்கை இனிதாகச் சென்றது. நினைத்தது நினைத்தபடி நடந்தது. அவரவர்கள் வழியில் சிறப்பாக வாழ்ந்தார்கள். ஆனால் இரண்டாமவன் நொந்து நூலாகித் துவண்டு வாழ்க்கையையே வெறுத்து விட்டான். இதிலிருந்து தெரிவதென்னவென்றால் எல்லாம் விரும்பிய வகையில் நடந்தால் வாழ்க்கை இன்பமயமானது. ஏறுக்கு மாறாயின் எல்லாம் பாழ். அப்படி வாழ்க்கை பாழாவது நமது கையிலும் இருக்கிறது. நம்மைச் சேர்ந்தவர்கள் கையிலும் இருக்கிறது. இதைத்தான் பர்த்தாவிற்கு ஏற்ற பதிவிரதை கிடைக்கா விட்டால் கூறாமல் சந்நியாசம் கொள் என்று அன்றே விவாகரத்து பற்றி பாடியிருக்கிறார் ஔவையார்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ஒருவன் வாழ்வதும் மற்றொருவன் வீழ்வதும் எதனால்? ஊழ், விதி, முன்வினை என்றெல்லாம் சொல்கின்றார்களே! அவைகளினாலா? வள்ளுவர் என்ன சொல்கின்றார்?
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
." அதாவது, ஊழ்வினையைக் காட்டிலும் வலிமை மிக்கது எது? எப்படிச் சென்றாலும் அது தன்னுடைய தன்மையைக் காட்டி விடும். விதியின் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்கின்றார். சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை எழுதிய இளங்கோவடிகள் சமணர் என்று கருதப் படுகிறவர் (சைவர் என்று தமிழாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்). அவரும் முற்பிறப்பில் கோவலன் செய்த பிழையால் மறுபிறப்பில் அவன் துன்புற்றதைக் கூறுகிறார். பொதுவாகவே எல்லாரும் ஒப்புக் கொள்வது என்னவென்றால் செய்கின்ற நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன் உண்டு என்று.

பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே


இதைத்தான் அருணகிரியாரும் முருகனிடம் கேட்கிறார். "அப்பா முருகா! பாழான இந்த வாழ்வு எனப்படும் மாயையில் என்னை வீழ்ச்சியுறும் வகையில் இட்டாயே! ஏன்? தாழ்வானவை என்று அறிஞர் பெருமக்களால் அறியப்படும் தீமைகளை நான் புரிந்தேனா? என்னைக் காப்பாற்றிய தெய்வமே! நீ நன்றாக இருப்பாய்! காரணத்தைக் கூறிவிடு!" என்று இறைஞ்சுகிறார் அருணகிரி.

பொதுவாக நாம் பேச்சு வழக்கில் ஒருவரிடம் கேட்கும் பொழுது, "அப்பா! நீ நன்றாக இருப்பாய்! உண்மையைச் சொல்லி விடு." என்று கேட்போம். அதையே கவிதை நடையிலும் பயன்படுத்தி செய்யுளை முடிக்கும் பொழுது "வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!" என்று கூறுகிறார். எந்த வினைகளிலிருந்தும் காப்பாற்ற வல்லவன் இறைவன் என்பதால் அவனிடமே காரணத்தைக் கேட்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

24 comments:

said...

இராகவன்,
வழமைபோல் உங்களின் பாணியில் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தங்களின் தமிழ் நடை படிக்கச் சுவையாக உள்ளது. பதிவுக்கு நன்றி.

said...

கடவுள் வாழ்த்தில் ஆரம்பிதத வள்ளுவர் ஊழ்வினை என்ற அதிகாரத்தில் தன்னுடைய அறத்துப்பாலை முடித்தத்ற்குக் காரணமே - அது அவ்வளவு வலிமையானது என்பதனால்தான்!

தனது மொழிபெயர்ப்பில் திரு.ஜி.யு போப் அவர்கள் Nothing is stronger than destiny என்று கூறுகிறார்

பதிவிற்குப் பாராட்டுக்கள் நண்பரே!

said...

// வெற்றி said...
இராகவன்,
வழமைபோல் உங்களின் பாணியில் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தங்களின் தமிழ் நடை படிக்கச் சுவையாக உள்ளது. பதிவுக்கு நன்றி. //

நன்றி வெற்றி. நீங்கள் படித்து மகிழ்ந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

said...

// SP.VR.SUBBIAH said...
கடவுள் வாழ்த்தில் ஆரம்பிதத வள்ளுவர் ஊழ்வினை என்ற அதிகாரத்தில் தன்னுடைய அறத்துப்பாலை முடித்தத்ற்குக் காரணமே - அது அவ்வளவு வலிமையானது என்பதனால்தான்!

தனது மொழிபெயர்ப்பில் திரு.ஜி.யு போப் அவர்கள் Nothing is stronger than destiny என்று கூறுகிறார் //

மிகச் சுவையான தகவலைத் தந்துள்ளீர்கள். உண்மைதான். Nothing is stronger than destiny.

// பதிவிற்குப் பாராட்டுக்கள் நண்பரே! //

நன்றி நண்பரே

said...

நல்ல பாடல் நல்ல விளக்கம்.இதில் ஒன்று கவனிக்க வேண்டும். நமக்கு யாராவது கொஞ்சம் துன்பம் கொடுத்தாலும் நாம் அவரை சுடுசொற்களால் சாடுவோம். ஆனால் அருணகிரி எவ்வளவு துன்பங்கள் முருகன் கொடுத்ததாகச் சொன்னாலும் என்ன சொல்கிறார் பாருங்கள்
"வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே
அதேபோல் அருணகிரியாரின் பாட்டில் மயிலையோ,வேலையோ அல்லது திருமாலையோ பற்றிவராதபாடலே கிடையாது.

said...

ஜி.ரா,
நாடி சோதிடத்தில் "கரும சாந்தி காண்டம்" என்று ஒன்று உள்ளது. அதில் நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் அதனால் இப்பிறவியில் பட போகும் இன்னல்கள் குறித்து இருக்குமாம். அதை பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...

said...

//தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே//

வாழ்வாய் "இனி". இனி என்பது தான் இங்கே முக்கியமான பதம்.

உலக வழக்கில் கூட "அப்பா! நீ நன்றாக இருப்பாய்! உண்மையைச் சொல்லி விடு." என்று சொல்வோமே அல்லாது, "அப்பா! நீ "இனி" நன்றாக இருப்பாய். உண்மையைச் சொல்லி விடு." என்றா சொல்கிறோம்?

சூட்சமம் என்னவென்றால்:
இனி நீ வந்து விட்டாய். நீ என்னுடன் வாழ்வாய். ஆதலினால், முன்பு நான் செய்த தாழ்வானவை எல்லாம் இனி உளவோ?....

நீ வந்து விட்ட பின், பழைய தாழ்வானவை தான் இனி இருக்குமா? இல்லை புது தாழ்வானவை தான் இனி நெருங்குமா?

(போய பிழையும், புகுதருவான் நின்றனவும் எல்லாம் தீயினில் தூசாகி விட்டது அல்லவா?)

இப்படியும் பொருள் கொள்ளலாமா ஜிரா? என்ன நினைக்கிறீர்கள்?

மற்றபடி பதிவு அருமை! ஊழ்வினை அறுக்கும் உமை மைந்தன் பற்றினைப் பற்றுவோம்!

said...

குமரன்
ஒருவர் சொன்னார்," நான் ஏம் பொண்டாட்டிய அடக்கிவிட்டேன்" என்றார்
அடுத்தவர் எப்படி என்றார்,"நா அவ சொன்னதை செய்திடுவேன்ல்ல" என்றார்
இது தான் விட்டுக்கொடுத்துப் போவது இல்லையா?

said...

நல்ல விளக்கம் இராகவன். இரவிசங்கரும் ஒரே வரியில் அருமையான விளக்கம் தந்துள்ளார். :-)

இந்த வாழ்வு 'நெருநல் இருந்தார் இன்றில்லை' எனும் பெருமையுடைய பாழ் வாழ்வு. இது படுமாயை. உள்ளது போல் தோன்றி இல்லாதது. இதில் 'நீ வீழ்வாய்' என எனை விதித்தாயே. நீ அப்படி என்னை விழ விட்டதால் தானே விழுந்தேன். நீ மனம் வைத்திருந்தால் எல்லாப் பிழைகளும் போய்விடுமே. அப்படி நடக்கவில்லையே. ஆனால் நீயோ நான் செய்த வினைகளுக்கு ஏற்பப் பயன் உண்டாகப் பணிப்பவன். அதனால் நீயே பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு தாழ்வானவை நான் செய்திருப்பேன் போலிருக்கிறதே. அப்படி உண்டா? மயில் வாகனனே. உன்னை எதிர்த்து நின்ற சூரனுக்கே அருள் புரிந்து மயிலாக்கி வாகனமாகக் கொண்டாய். அடியேன் எனக்கு அருள் புரிந்து என்னை இனி இந்த மாயையிலிருந்து அகற்றி வாழ்வளிக்க மாட்டாயா என்ன? இனி நீயும் வாழ்வாய் மயில் வாகனனே. உன்னடியானான நானும் வாழ்ந்து போகிறேன்.

said...

// தி. ரா. ச.(T.R.C.) said...
நல்ல பாடல் நல்ல விளக்கம்.இதில் ஒன்று கவனிக்க வேண்டும். நமக்கு யாராவது கொஞ்சம் துன்பம் கொடுத்தாலும் நாம் அவரை சுடுசொற்களால் சாடுவோம். ஆனால் அருணகிரி எவ்வளவு துன்பங்கள் முருகன் கொடுத்ததாகச் சொன்னாலும் என்ன சொல்கிறார் பாருங்கள்
"வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே
அதேபோல் அருணகிரியாரின் பாட்டில் மயிலையோ,வேலையோ அல்லது திருமாலையோ பற்றிவராதபாடலே கிடையாது. //

அதனால்தான் அவர் அருணகிரிநாதர். நாமெல்லாம் வெறும் மானிடர்கள். இல்லையா தி.ரா.ச?

said...

// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
நாடி சோதிடத்தில் "கரும சாந்தி காண்டம்" என்று ஒன்று உள்ளது. அதில் நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் அதனால் இப்பிறவியில் பட போகும் இன்னல்கள் குறித்து இருக்குமாம். அதை பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்... //

வெட்டிப்பயல், நம்மோட இந்தப் பதிவுக்கு நீங்க வருகை தந்ததில் மகிழ்ச்சி.

நாடியோ மூடியோ...ஜோதிடத்தை நான் நம்புறதில்லை. ஏன்னா! பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் ஜோதிடம் பக்கம் போகாதே என்று சொல்லியிருக்கிறார்கள். சமயக்குரவர்கள் முதற்கொண்டு அருணகிரி வரைக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

"நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?"னு அருணகிரி அடுக்கோ அடுக்குன்னு அடுக்குறாரு. நமக்கு எதுனாலும் முருகந்தான். முருகா முருகான்னு முன்வினையும் பின்வினையும் எவ்வினையும் போகுமே! அப்புறம் படப்போற இன்னல்கள் குறித்து ஏன் பார்க்கனும்.

ஆகையால ஒங்க கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. மன்னிச்சிக்கிருங்க.

said...

// சூட்சமம் என்னவென்றால்:
இனி நீ வந்து விட்டாய். நீ என்னுடன் வாழ்வாய். ஆதலினால், முன்பு நான் செய்த தாழ்வானவை எல்லாம் இனி உளவோ?....

நீ வந்து விட்ட பின், பழைய தாழ்வானவை தான் இனி இருக்குமா? இல்லை புது தாழ்வானவை தான் இனி நெருங்குமா?

(போய பிழையும், புகுதருவான் நின்றனவும் எல்லாம் தீயினில் தூசாகி விட்டது அல்லவா?)

இப்படியும் பொருள் கொள்ளலாமா ஜிரா? என்ன நினைக்கிறீர்கள்?

மற்றபடி பதிவு அருமை! ஊழ்வினை அறுக்கும் உமை மைந்தன் பற்றினைப் பற்றுவோம்! //

ரவி, இப்படிச் சொல்லலாமா என்று தெரியாது. ஆனால் விளக்கம் சுவையாக இருக்கிறது. "வாழ்வாய்" இனி நீ மயில்வாகனனே! எனக்கு வாழ்வாய் இனிமேல் நீதான் மயில்வாகனனெ! ஆகா! சொல்லிப் பார்ப்பதே இன்பமாக இருக்கிறது.

said...

//"நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?"னு அருணகிரி அடுக்கோ அடுக்குன்னு அடுக்குறாரு. நமக்கு எதுனாலும் முருகந்தான். முருகா முருகான்னு முன்வினையும் பின்வினையும் எவ்வினையும் போகுமே! அப்புறம் படப்போற இன்னல்கள் குறித்து ஏன் பார்க்கனும்.
//
இப்படியும் சொல்றீங்க... விதிப்பயன்படிதான் வாழ்க்கை அமையும்னு சொல்றீங்க... எது பெரியது?

said...

// ENNAR said...
குமரன்
ஒருவர் சொன்னார்," நான் ஏம் பொண்டாட்டிய அடக்கிவிட்டேன்" என்றார்
அடுத்தவர் எப்படி என்றார்,"நா அவ சொன்னதை செய்திடுவேன்ல்ல" என்றார்
இது தான் விட்டுக்கொடுத்துப் போவது இல்லையா? //

என்னார்..... :-)) சரியாகச் சொன்னீர்கள்.

said...

//// குமரன் (Kumaran) said...
நல்ல விளக்கம் இராகவன். இரவிசங்கரும் ஒரே வரியில் அருமையான விளக்கம் தந்துள்ளார். :-)

இந்த வாழ்வு 'நெருநல் இருந்தார் இன்றில்லை' எனும் பெருமையுடைய பாழ் வாழ்வு. இது படுமாயை. உள்ளது போல் தோன்றி இல்லாதது. இதில் 'நீ வீழ்வாய்' என எனை விதித்தாயே. நீ அப்படி என்னை விழ விட்டதால் தானே விழுந்தேன். நீ மனம் வைத்திருந்தால் எல்லாப் பிழைகளும் போய்விடுமே. அப்படி நடக்கவில்லையே. ஆனால் நீயோ நான் செய்த வினைகளுக்கு ஏற்பப் பயன் உண்டாகப் பணிப்பவன். அதனால் நீயே பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு தாழ்வானவை நான் செய்திருப்பேன் போலிருக்கிறதே. அப்படி உண்டா? மயில் வாகனனே. உன்னை எதிர்த்து நின்ற சூரனுக்கே அருள் புரிந்து மயிலாக்கி வாகனமாகக் கொண்டாய். அடியேன் எனக்கு அருள் புரிந்து என்னை இனி இந்த மாயையிலிருந்து அகற்றி வாழ்வளிக்க மாட்டாயா என்ன? இனி நீயும் வாழ்வாய் மயில் வாகனனே. உன்னடியானான நானும் வாழ்ந்து போகிறேன். //

வாங்க குமரன் வாங்க. நீங்க சொன்னதும் சரியாத்தான் இருக்கு. எங்க கொஞ்ச நாளா ஆளைக் காணோம்.

said...

//எங்க கொஞ்ச நாளா ஆளைக் காணோம்//

என்ன கொடுமை இராகவன்? தவறாம உங்க எல்லாப் பதிவுகளுக்கும் வந்து படிச்சுப் பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கேன். இப்படி கேக்கறீங்க? இங்ஙன தேன் இருக்கேன்.

said...

// வெட்டிப்பயல் said...
//"நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?"னு அருணகிரி அடுக்கோ அடுக்குன்னு அடுக்குறாரு. நமக்கு எதுனாலும் முருகந்தான். முருகா முருகான்னு முன்வினையும் பின்வினையும் எவ்வினையும் போகுமே! அப்புறம் படப்போற இன்னல்கள் குறித்து ஏன் பார்க்கனும்.
//
இப்படியும் சொல்றீங்க... விதிப்பயன்படிதான் வாழ்க்கை அமையும்னு சொல்றீங்க... எது பெரியது? //

பேருல இருக்குற வெட்டி கேள்வியில இல்லை. :-) நல்ல கேள்வி.

விதி வலியதுதான். மற்றொன்று சூழினும் தாம் முந்துரும். சரி. ஆனால் விதியை மதியால் வெல்லலாம்னு சொல்றாங்களே! அதென்ன மதி? மதின்னா அறிவு. மெய்யறிவு உண்டாயின் எந்த விதியின் சதியும் துயர் செய்ய முடியாது. மெய்யறிவு இறையருளால் மட்டுமே கிடைக்கும். அதத்தான் இங்க அருணகிரி சொல்றாரு. ஆயிரம் ஆனையைக் கொன்றால் பரணி. சரி. அதுக்காக ஆயிரம் ஆனைகளே பலம் என்றாகி விடுமா? அந்த ஆயிரத்தையும் வென்றது அல்லவா வீரம்! அப்படித்தான் இங்கும்.

said...

நண்பர்களே, இந்தப் பதிவிற்கு இரண்டு - ஓட்டுகள் விழுந்திருக்கின்றன. உங்கள் எண்ணத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஏன் என்று கருத்து சொல்லவில்லையே! இந்தப் பாட்டிற்குத் தவறாகப் பொருள் கூறியிருக்கிறேனா?

said...

ராகவன்,

அருமையான பாடலை எடுத்து விளக்கியிருக்கிறீர்கள். நன்று. விதி வலியது தான், ஆனால், பகவத்சக்தி அதனினும் வலியது என்று தான் எந்த ஒரு பக்தனும், ஆன்மீக வாதியும் நம்புகிறான்.

ஜோதிடம் பற்றிக் கேட்டதற்கு அழகாகவும், ஆணித்தரமாகவும் பதி அளித்டிருக்கிறீர்கள். ஆன்மீகப் பார்வையில் அடிபடும் ஜோதிடம் எனற என் பதிவில் இதை விலாவாரியாக விளக்க முயற்சித்திருக்கிறேன் -
http://jataayu.blogspot.com/2006/
08/2.html

நன்றி.

said...

சரி, நீங்க சொல்ற கதைப்படி இரண்டாமவன் என்ன செய்திருக்க வேண்டும்???

இறைவனை தொழுதிருந்தால் அவன் இன்னல் அகன்றிருக்கும் என்று சொல்கிறீர்களா?

அல்லது இறைவனை தொழுதலே அவனுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். அதனால் அவன் இல்லாள் கொடுமைக்காரியாக இருந்தாலும் அவன் அதை பெரிதாக நினைக்காமல் இறை நாமத்திலே மகிழ்ச்சியடைந்திருப்பான் என்று சொல்கிறீர்களா?

said...

நல்ல கேள்வி பாலாஜி. அடுத்த மாதம் நான் மீண்டும் பதிவுகள் இடத் தொடங்கிய பின் எழுத நினைத்திருப்பவற்றில் விதி, சோதிடம், கிரகபலன், வினைப்பயன் - இவற்றைச் சேர்ந்த தலைப்பும் ஒன்று. விரிவாக அப்போது எழுதுகிறேன்.

said...

நல்ல விளக்கம் ராகவன்.

"தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் இன்னாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற்றுய்ந்தான்"
-கந்தபுராணம்
என் 'பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா!'
மாயை எனும் படுகுழியில் உழன்று கிடந்த என்னை நீ உய்வித்ததில் வியப்பென்ன?மாயையின் மைந்தன், உன்னுடன் கொடும்போர் புரிந்த சூரனுக்கெ நற்கதியளித்து உன் வாகனமாக்கிக்கொண்டாய். நீ வாழ்வாய்

said...

குமரன்,
தங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

said...

//நீ வந்து விட்ட பின், பழைய தாழ்வானவை தான் இனி இருக்குமா? இல்லை புது தாழ்வானவை தான் இனி நெருங்குமா?//

:)
அப்படி இல்லை! அஃது பொய்! உண்மை விளக்கம் அல்ல!

தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
= முருகா, நீ தாழ்வானதை எல்லாம் செய்ய மாட்டாயே! உளவோ?
ஆனால் இப்போது என் விஷயத்தில் செய்து விட்டாயே!

பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே!
- இப்படி என்னை, வாழ்வு பாழ் என ஆக்கி விட்டாயே! வீழ்வாய் என விதித்து விட்டாயே! தாழ்வானவை செய்து விட்டாயே என் முருகா! முருகா!

வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!
= இனி நீ நன்கு "வாழ்வாய்" என்று உன்னைப் புகழ்வது போல் பழிக்கட்டுமா? வஞ்சப் புகழ்ச்சியும் நிந்தா ஸ்துதியும் செய்யட்டுமா??

ஐயோ, என் முருகா.....
என் வாழ்வோடு கலந்த உன்னை அப்படிச் சொன்னால் என்னை நானே சபித்துக் கொண்டதாக அல்லவா ஆகி விடுவேன்? உன்னை என்ன தான் செய்ய?

ஆனாலும் உனக்குத் தண்டனை தந்தே ஆக வேண்டும்!
தாழ்வானதைச் செய்த தமிழ்வேளே!
வாழ்வாய் இனி நீ = என் வாழ்வாகவே இனி நீ ஆகிப் போ!

என்னைப் பாழ் வாழ்வில் வீழ்வாய் என்று விதித்து விட்டதாய் உனக்கு நினைப்பா? அடேய் முருகா...

என் பாழ் வாழ்விலும் நீ தானே என்னோடு வாழ வேண்டும்!
நீ எனக்கு விதிக்க வில்லை முருகா! உனக்கு நீயே விதித்துக் கொண்டாய்! உனக்கு நீயே விதித்துக் கொண்டாய்!

என்னவாய்? = வாழ்வாய் இனி! பாழ்வாழ்வில் என் வாழ்வாக இனி!
நீயே...
மயில்வா கனனே!

கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்...
என் வெந்துயர் வீட்டா விடினும்....
உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகங்குழைய மாட்டேனே! அகங்குழைய மாட்டேனே!