Thursday, June 07, 2007

03. இஇ - தண்டியும் கிழவியும்

தண்டியலங்காரத்தை இயற்றியவர் தண்டி என்ற பெயரில் வழங்கப்படுகிறார். இவர் தண்டியாசிரியர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் காளிதாசரின் காலத்தை ஒத்தவர் என்று கூறுகின்றவர்களும் உண்டு. ஆனால் அதற்கு ஆதாரம் இருப்பது போலத் தெரியவில்லை.

தண்டியலங்காரம் என்பது இலக்கண நூல். இது செய்யுட்களின் இலக்கணத்தைப் பற்றி விளக்குகிறது. ஒரு காப்பியம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய இலக்கணம் என்ன? அந்தக் காப்பியத்தில் பயன்படுத்த வேண்டிய செய்யுட்களின் வகைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் விளக்கும் நூல் தண்டியலங்காரம்.

இப்படிப்பட்ட நூலை யாரை வணங்கித் துவக்கியிருப்பார் தண்டியாசிரியர்?

சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தை வைத்து இயம்புவல் செய்யுட் கணியே


சொல்லின் கிழத்தியைப் புகழ்ந்து தனது இலக்கண நூலைத் துவக்குகிறார். சொல்லின் கிழத்தி என்றால்? கிழவன் என்றால் தலைவன் என்று பொருள். கிழத்தி என்றால் தலைவி. இல்லக் கிழத்தி என்று இல்லத்தலைவியைச் சொல்கின்றோம் அல்லவா. திருமுருகாற்றுப்படையில் முருகனைக் "குறிஞ்சி மலைக் கிழவோனே" என்று நக்கீரரும் பாடியிருக்கிறார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். சொல்லின் கிழத்தி யார்? சொற்களுக்கெல்லாம் தலைவிதான் சொல்லின் கிழத்தி. கலைமகளைத் தொழுது தனது இலக்கண நூலைத் துவக்குகிறார்.

சொற்களின் நயத்தைப் பாருங்கள். சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடியாம். சொற்களின் தலைவியாகிய கலைமகளின் மெல்லிய திருவடிகள் என்று பொருள். அந்தத் திருவடியில் சிந்தை வைத்து இயம்புகிறார் தண்டி. எதை இயம்புகிறார்? செய்யுட் கணியை!

செய்யுட் கணியா? அப்படியென்றால்! கணி என்றால் கணக்கு. ஒரு செய்யுளைச் செய்யும் கணக்கை இயம்புகின்றாராம். அதாவது இலக்கணம். ஒரு நூலைப் படைக்க வேண்டிய செய்யுட்களைச் செய்யும் இலக்கணங்களை சொல்லின் கிழத்தியின் மெல்லியல் இணையடியில் சிந்தை வைத்துத் துவக்குகிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்

16 comments:

said...

ராகவன்,

இந்த மாதிரி பதிவுகள்ல என்ன பின்னூட்டம் போடறதுன்னு எனக்கு தெரியல.. இப்பல்லாம் ஆன்மீக பதிவு மட்டும்தான் எழுதறீங்க போலருக்கு?

அதனால... ஒங்க புது ஃபோட்டோ சூப்பராருக்கு... அதுசரி.. அது என்ன பேக்ரவுண்ட்.. Star war set மாதிரி இருக்கு:))

said...

// tbr.joseph said...
ராகவன்,

இந்த மாதிரி பதிவுகள்ல என்ன பின்னூட்டம் போடறதுன்னு எனக்கு தெரியல..//

தெரிஞ்சதப் போடுங்க சார். ஒன்னும் புரியலையா....ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட் :)

// இப்பல்லாம் ஆன்மீக பதிவு மட்டும்தான் எழுதறீங்க போலருக்கு? //

இல்லைங்க. இது இனியது கேட்கின். மகரந்தத்துல கடைசியாப் போட்டது பெரியார் திரைப்பட விமர்சனம். எழுத நேரமில்லை. வேலை நெறைய. அதான் பதிவுகள் எண்ணிக்கை குறையுது.

// அதனால... ஒங்க புது ஃபோட்டோ சூப்பராருக்கு... அதுசரி.. அது என்ன பேக்ரவுண்ட்.. Star war set மாதிரி இருக்கு:)) //

நன்றி சார். அது ஆம்ஸ்டர்டாம்ல கால்வாய்களைச் சுத்திக்காட்டுற படகுல உக்காந்து எடுத்தது. போன வாரத்துக்கு முந்தின வாரந்தான் எடுத்தது. இப்ப நெதர்லாந்துல இருக்கேன் சார்.

said...

:-O
anna...ippadi ellam nalla post ah poodal naan eppadi kummi adipen?but never mind..puthasa oru oru knowledge kidaichu irukku,time irrukum pothu matha post ellam padichu kelvi ketpen.ennaku nalla teacher ah irunthu pathil sollunga.

said...

ராகவா!
பொதுவாக பிள்ளையாரை வணங்கித் தொடங்குவார்கள். இவர் கலைமகளை வணங்குகிறார்.
இப்போ ஒல்லாந்திலா? இருக்கிறீர்கள். பாரிஸ் வரும் நோக்கமுண்டா?

said...

// துர்கா|†hµrgåh said...
:-O
anna...ippadi ellam nalla post ah poodal naan eppadi kummi adipen?but never mind..puthasa oru oru knowledge kidaichu irukku,time irrukum pothu matha post ellam padichu kelvi ketpen.ennaku nalla teacher ah irunthu pathil sollunga. //

கண்டிப்பா. என்ன கேள்வி கேக்கனுமோ..கேளு. எனக்குத் தெரிஞ்சதச் சொல்றேன்.

இங்க எப்படி கும்மியடிக்கிறதா! செல்லாத்தா செல்ல மாரியாத்தான்னு கும்மியடிக்கலாமே.

said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
பொதுவாக பிள்ளையாரை வணங்கித் தொடங்குவார்கள். இவர் கலைமகளை வணங்குகிறார். //

வாங்க யோகன் ஐயா. பிள்ளையாரை வணங்கித் துவக்குவது பிற்கால இலக்கியங்களின் காணக்கிடைத்தாலும் முற்காலத்தில் அப்படியிருக்கவில்லை. கிடைத்ததில் பழைய நூலாகிய குறுந்தொகை முருகனை வணங்கித் தொடங்குகிறது. சென்ற பதிவில் சொன்ன நளவெண்பா நரசிம்மரை வணங்கித் துவங்குகிறது. இதில் கலைமகள். இப்படிப் பலவகையான கடவுள் வணக்கங்களைச் சொல்வதுதான் இந்த இலக்கியத்தில் இறை தொடர்.

// இப்போ ஒல்லாந்திலா? இருக்கிறீர்கள். பாரிஸ் வரும் நோக்கமுண்டா? //

ஆமாம் ஐயா. வரும் விருப்பம் உண்டு. ஆனால் எப்பொழுது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் வரும் எண்ணம் உண்டு. பக்கத்து ஊர்தானே. படக்கென்று கூடக் கிளம்பி வந்து விடலாம். உங்களைக் கண்டிப்பாக்ச் சந்திக்கிறேன்.

said...

//கிழவன் என்றால் தலைவன் என்று பொருள். கிழத்தி என்றால் தலைவி//

தலைவா-ன்னு கூப்பிடறதுக்குப் பதிலா கிழவா-ன்னு இனி கூப்பிடலாமா? :-)

சொல்லின் கிழத்தி கலைமகளைச் சிறப்பித்து விட்டு, இலக்கணம் பாடத் துவங்குவது சிறப்பு!
கம்பரும் சரசுவதி அந்தாதி பாடினார். பாரதியும் வெள்ளைத் தாமரையாளைப் போற்றித் துவங்குகிறான்.

said...

//செய்யுட் கணியே //
//செய்யுட் கணியா? அப்படியென்றால்! கணி என்றால் கணக்கு. ஒரு செய்யுளைச் செய்யும் கணக்கை இயம்புகின்றாராம். // -- அல்ல

செய்யுட் கணியே = செய்யுட்கு அணி

அதாவது கலைமகளின் பாதத்தில் சிந்தையை வைத்து செய்யுளுக்கு உண்டான அணியை அதாவது இலக்கனத்தை சொல்கிறார்.

said...

ஆகா. நான் சொல்லலாம்ன்னு வந்ததை மடையன் சொல்லிட்டாரே. செய்யுட்கு அணி என்பதே இயற்கையான பொருளாக இருக்கிறது இராகவன். செய்யுட் கணி என்று பிரித்து பின் கணி என்பதற்குப் பொருள் சொல்வது செயற்கையாகத் தோன்றுகிறது.

சொல்லின் கிழத்தி என்று கலைமகளை இப்போது சொல்கிறோம். தண்டியாசிரியர் காலத்திலும் அவளே தான் சொல்லின் கிழத்தியாக இருந்தாளோ இல்லையோ; கலைமகளைத் தான் சொல்கிறார் என்பதற்கு வேறு எந்த அடையாளமும் அவர் காட்டவில்லை - அதனால் இந்த ஐயம். இப்படிப் பொதுவாகச் சொல்வதால் பொருள் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது சில நேரங்களில். :-)

said...

// மடையன் said...
//செய்யுட் கணியே //
//செய்யுட் கணியா? அப்படியென்றால்! கணி என்றால் கணக்கு. ஒரு செய்யுளைச் செய்யும் கணக்கை இயம்புகின்றாராம். // -- அல்ல

செய்யுட் கணியே = செய்யுட்கு அணி

அதாவது கலைமகளின் பாதத்தில் சிந்தையை வைத்து செய்யுளுக்கு உண்டான அணியை அதாவது இலக்கனத்தை சொல்கிறார். //

ஏங்க...இப்பிடி ஒரு அருமையான விளக்கம் சொல்லீருக்கீங்க. ஒங்க பேர மொதல்ல மாத்துங்க. :) நீங்க சொல்றது ரொம்பப் பொருத்தமா இருக்கு. நானும் ஒத்துக்கிறேன். செய்யுள் + கணின்னு பிரிக்கிறது இலக்கணப்படி சரின்னாலும் என்னோட அறிவு நீங்க சொன்ன செய்யுட்கு அணி என்பதைத்தான் ஏற்றுக்கொள்கிறது.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கிழவன் என்றால் தலைவன் என்று பொருள். கிழத்தி என்றால் தலைவி//

தலைவா-ன்னு கூப்பிடறதுக்குப் பதிலா கிழவா-ன்னு இனி கூப்பிடலாமா? :-) //

உண்மையிலேயே அப்படித்தான் கூப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. குறிஞ்சி நிலக் கிழவன்னு நக்கீரர் சொல்றாரே....

முந்தியெல்லாம் கிழவன்னா தலைவன். இப்பல்லாம் தலைவன்னா கிழவன்.

// சொல்லின் கிழத்தி கலைமகளைச் சிறப்பித்து விட்டு, இலக்கணம் பாடத் துவங்குவது சிறப்பு!
கம்பரும் சரசுவதி அந்தாதி பாடினார். பாரதியும் வெள்ளைத் தாமரையாளைப் போற்றித் துவங்குகிறான். //

வெள்ளைத் தாமரைப் பூவினிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியினில் இருப்பாள்...
மறக்க முடியுமா ரவி?

said...

// குமரன் (Kumaran) said...
ஆகா. நான் சொல்லலாம்ன்னு வந்ததை மடையன் சொல்லிட்டாரே. செய்யுட்கு அணி என்பதே இயற்கையான பொருளாக இருக்கிறது இராகவன். செய்யுட் கணி என்று பிரித்து பின் கணி என்பதற்குப் பொருள் சொல்வது செயற்கையாகத் தோன்றுகிறது. //

ஒத்துக்கிறேன். ஒத்துக்கிறேன். :)

// சொல்லின் கிழத்தி என்று கலைமகளை இப்போது சொல்கிறோம். தண்டியாசிரியர் காலத்திலும் அவளே தான் சொல்லின் கிழத்தியாக இருந்தாளோ இல்லையோ; கலைமகளைத் தான் சொல்கிறார் என்பதற்கு வேறு எந்த அடையாளமும் அவர் காட்டவில்லை - அதனால் இந்த ஐயம். இப்படிப் பொதுவாகச் சொல்வதால் பொருள் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது சில நேரங்களில். :-) //

உண்மைதான். அவர் காளியைக் கூடச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. பொதுவாகச் சொல்வதால் குழப்பமில்லை. எல்லாம் ஒன்று என்று ஏற்றுக்கொள்ளும் போது குழப்பம் எதற்கு!

said...

ராகவன்,
படிச்சுப் புரிந்து கொண்டது கொஞ்சம்தான்.அதுவே நல்லா இருக்கு.

நிலக்கிழார்,கிழத்தி உண்டு.
கிழவனும் உண்டோ.

said...

இராகவன்,
அருமை! அருமை!
மிக நல்ல பதிவு. உங்களின் பதிவையும் அதற்கு வரும் பின்னூட்டங்களைப் படித்தும் பல தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது.

/* தண்டியலங்காரம் என்பது இலக்கண நூல் ...இவர் தண்டியாசிரியர் என்றும் அழைக்கப்படுகிறார்.*/

நான் இதுவரை கேள்விப்படாத நூல், நூலாசிரியர். மிக்க நன்றி.
உங்களின் பதிவு ஒரு பல்கலைக்கழகத்திற்கு நிகரானது என்றால் மிகையல்ல. இங்கே எம்மினத்தின் பழங்கால செய்திகள் பலவற்றை அறியக் கிடைக்கிறது.

/* இவர் காளிதாசரின் காலத்தை ஒத்தவர் என்று கூறுகின்றவர்களும் உண்டு. */

அது எந்த் நூற்றாண்டு?

said...

‘வாக் தேவி’, ‘வாகீச்வரி’ என்பதன் தமிழ் வடிவமே ‘சொல்லின் கிழத்தி’

said...

அன்பு நண்பரே,
வணக்கம். உங்களுடைய வலைப்பூ அருமையாக உள்ளது. நான் புதிதாக ஒன்று தொடங்கியுள்ளேன். வருகை தந்து கருத்துச் சொல்ல வேண்டும்.
தேவ்
www.askdevraj.blogspot.com
rdev97@gmail.com